இஸ்ரேலில் அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய இலங்கையர்: வெளியான பின்னணி

இஸ்ரேலில் (Israel) இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் ஒருவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) தெரிவித்துள்ளார்.

குறித்த நபர், இரண்டு வாரங்களாக பணிக்கு வராதமை மற்றும் ஏனைய இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற குற்றச்சாட்டிக்களின் பேரில் நாடு கடத்தப்படவிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரை கைது செய்ய இஸ்ரேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதன்படி, இதுவரையில் இஸ்ரேலுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.