கிளிநொச்சியில் நீராட சென்ற இளைஞன் பலி!

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நீராட சென்ற குறித்த இளைஞன் மாங்குளம், ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.