சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 10 மணியளவில் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.