நடுவானில் பெண்ணிற்கு கொரோனா பாசிடிவ் !

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மரிஸா ஃபோட்டியோ, இவர் அங்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஐஸ்லாந்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவர் அமெரிக்காவின் சிக்காகோவிலிருந்து ஐஸ்லாந்திற்கு டிக்கெட் புக் செய்திருந்தார். அவர் பயணிக்கும் முன்பு தனக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்றே ரிசல்ட் வந்துள்ளது.

இந்நிலையில் விமானத்தில் ஏறிய விமானம் தரையிறங்க சுமார் 5 மணி நேரம் இருந்த நிலையில் அவருக்கு தொண்டை வலி மற்றும் லேசான காய்ச்சல் இருப்பதை உணர்ந்தார். உடனடியாக தன் கையில் வைத்திருந்த ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் அவருக்கு அவரே விமானத்தின் பாத்ரூமிற்குள் சென்று டெஸ்ட் செய்தார். அப்பொழுது அவருக்கு கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் வெளியில் சென்றால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் அவர் விமானத்தின் பாத்ரூம் உள்ளேயே இருந்துவிட்டார். விமான பணியாளர்களிடம் தனக்கு கொரோனா இருப்பது தற்போது தான் தெரிய வந்துள்ளது என்பதை கூறினார். விமானம் தரையிறங்கியதும் இவரை ஐஸ்லாந்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்த போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

நடுவானில் ஒரு பெண் தனக்கு கொரோனா இருப்பது தெரிந்ததும் 5 மணி நேரம் விமானத்தின் டாய்லெட்டில் பயணித்து மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பை குறைத்துள்ளார். இந்த செயலுக்கு பலர் இந்த பெண்ணிற்கு வாழ்த்துக்களையும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அவரே டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.