காற்றாலை மின்னுற்பத்தி திட்ட ஒப்பந்தம் : அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை


காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் சாகர் அதானி மற்றும் அதானி  எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்து நேற்று  வியாழக்கிழமை சந்தித்துள்ளனர்.

மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை ஆற்றல் மின்உற்பத்தி திட்டத்திற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக அதானி கிரீன் எனர்ஜியின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் மன்னாரில் 250 மெகாவாட் மின்சாரமும், பூநகரியில் 234 மெகாவாட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.