தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், அதே கட்சியைச் சேர்ந்த வேலுகுமார் எம்.பி.யைத் தாக்கினார். எப்போதும் ஒழுக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, திகாம்பரம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேள்வியெழுப்பினார்.
பம்பலப்பிட்டியவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்
தனியார் தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், அதே கட்சியைச் சேர்ந்த வேலு குமார் எம்.பி.யைத் தாக்குகின்றார். அது மாத்திரமின்றி தகாத வார்த்தைகளையும் பிரயோகத்தார்.
உண்மையில் ஒரு சமூகத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எதிர்க்கட்சியிலிருக்கும் போதே இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் ஆட்சியைக் கைப்பற்றினால் எவ்வாறு நடந்து கொள்வர் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
ஒழுக்கமற்றோருக்கு தனது கட்சியில் இடமில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருப்பார். அவ்வாறெனில் ஒரு ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒழுக்கமின்றி நடந்து கொண்ட திகாம்பரம் மீது எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
இதேநேரம் நாட்டில் நீண்ட காலமாக நிலவும் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே ஆட்சியை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டுவஸ்நுவர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழல் மோசடி நிறுத்தப்பட வேண்டும்.
அத்தோடு, மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர்.
நாட்டின் எதிர்காலம் மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து இவ்வாறான கட்சி தாவல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதனை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் அரசியல் ஊழல் மற்றும் மோசடியால் நிரம்பியுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இவ்வாறான ஊழல் மற்றும் மோசடி நிலைமைகள் மாற்றப்பட வேண்டும் எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்தலில் வெறுப்பு, தற்பெருமை அரசியலை நிராகரித்து உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தை வழங்க இந்நாட்டின் புத்திசாலித்தனமான மக்கள் தீர்மானித்துள்ளனர். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.
நீர்கொழும்பு ஒலன்ரா ஹோட்டலில் இடம்பெற்ற நீர்கொழும்பு - கட்டான முக்கிய செயற்பாட்டாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
இரண்டு வருடங்களில் ரணில் விக்கிரமசிங்க சாதனை புரிந்துள்ளதாக முழு உலகமும் கூறுகின்றது. நாமல் ராஜபக்சவின் அரசியலால்தான் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்ளச் சென்று அதன் விளைவாக முழு நாடும் தீப்பற்றியது. இவ்வாறு நாட்டை வீழ்த்தி, பொருளாதாரத்தை சீரழித்த பின் தற்போது மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர் என்றார்.
இதேநேரம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்த அவர்,
உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டார்.
அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும் அதே பாதையில் சென்றுள்ளார்.
குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை வெளிப்படுத்தாதிருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர் என்றார்.
இததேவேளை "தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன். ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்துக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும் அதே பாதையில் சென்றுள்ளார்.
குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை வெளிப்படுத்தாதிருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர் என்றார்.
இததேவேளை "தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன். ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்துக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை அநுராதபுரம் நகரில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ ,
தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவோம். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டோம்." - என்றார்.