சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்வி

சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்வி


சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். புலிகள் அல்லது தமிழர்கள் மீதும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது தொடர்பில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று(19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தா்.

கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதற்கு ஏன் இலங்கை அஞ்சுகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஐ.நாவில் 2012ஆம் ஆண்டு முதல் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் அதனால் இலங்கையில் எதுவும் நடவிக்கவில்லை. நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை.

தென்னாபிரிக்காவில் உள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு தொடர்பில் சிந்திப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறுகிறார். ஆனால் இந்த ஆணைக்குழுவை தென்னாபிரிக்காவில் அமைக்கக் காரணமாக இருந்த டெஸ்மண்ட் டுடுவே அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு முன்பாக படுகொலைகளை செய்தவர்கள் மன்னிப்புக்கோருவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விடுவதுமே நடக்கும்.இதனை தவிர வேறெதுவும் நடக்காது.

படுமோசமான குற்றச்செயல்கள் இந்த ஆணைக்குழுவால் மூடிமறைக்கப்படும். இந்த முறையே இலங்கைக்கு வேண்டுமென அலி சப்ரி கூறுகிறார் எனவும் தெரிவித்தார்.