சிங்கப்பூரில் வைத்து பதவி விலகுவதற்கு முடிவு செய்தது ஏன் ?

சிங்கப்பூரில் போராட்டம்

மக்களின் பாரிய புரட்சி காரணமாக விரட்டியடிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிங்கப்பூரின் தீர்மானத்திற்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) சிங்கப்பூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஹாங் லிம் பூங்காவில் உள்ள சபாநாயகர் வளாக பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்கப்பூரில் உள்ள ராஜபக்சவின் வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பகிரங்கப்படுத்துமாறும் கோட்டாபய ராஜபக்சவை நாடு கடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் சிங்கப்பூரில் வைத்து ராஜபக்ச பதவி விலகுவதற்கு முடிவு செய்தது ஏன் என்று மக்கள் குரலின் முன்னாள் வேட்பாளரான 68 வயதான லியோங் செ ஹியன் அவர் கேள்வி எழுப்பினார்.

சிறிலங்காவில் இடம் பெற்ற மக்கள் எதிர்ப்பின் காரணமாக விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலைதீவு சென்ற கோட்டாபயவுக்கு மாலைதீவில் கடும் எதிர்ப்பு நிலவியது

இதனையடுத்து பிரத்தியேக விமானம் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கோட்டாபய ஏன் சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகலை அறிவிக்க வேண்டும் எனவும், உடனடியாக உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் சிங்கப்பூரில் போராட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.