Whats App ல் பழைய சாட்டுக்களை இழக்காமல் புதிய எண்னை மாற்றும் வழி என்னவென்று தெரியுமா?

ஒரு Whats App பயனர் தனது மொபைல் எண்ணை மாற்றும் போது, அவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை பழைய எண்ணில் இருந்த  சாட் ஸ்டோரிகளை  அவர்களால் மீட்டு எடுக்க முடியாது. இதனால் பயனர்களுக்கு  தங்களுக்கு தேவையான   Whats App     சாட்டுக்களை இழக்க நெரிடுகின்றது. ஆனால்  Android மற்றும் iOS சாதனைங்களில்  இது போன்ற பழைய    சாட்டேட்டாக்களை  மீட்டேடுக்க வழியுண்டு. இந்த செயன்முறைக்கு ஒரு முறை  OTP தேவைப்படும் என்பதால் புதிய எண் பயன்பாட்டில் இருக்கும் போது மட்டுமே  இந்த அம்சம் இருக்கும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இதனை செய்வதுக்கு  உங்களது போனில் உள்ள     Whats App செட்டிங்க்கு  செல்லவும். அதில் உங்களது அக்கௌன்ட்  ஓப்க்ஷன்னில் Change Number என்றதை தேர்ந்து எடுத்த பின்னர் Next டை Click செய்யவும். உங்களின் பழைய / புதிய எண்ணை உள்ளிடவும். பிறகு Next யை கிளிக் செய்யவும். உறுதிப்படுத்தலுக்காக ஒரு புதிய நோட்டிபிகேஷன்  இப்போது திரையில் தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான ஓப்க்ஷன்னை தெரிவு  செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் ஒன்றை  Click செய்துடன் உங்களது தொடர்பு தானாகவே புதுப்பிக்கப்படும்.OTP இல் உள்ளிட்டதும் உங்களது கணக்கு திறக்கப்படும். அதில் உங்கள் பழைய  சாட்டுக்கள் அப்படியே இருக்கும்.