2020 உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களை எடுத்தது.
இதேவேளை இந்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடாில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனைகளில் இது பதிவானதோடு, உலகக் கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லையும் எட்டியது.
இன்னிலையில் 219 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியால் 16 ஓவர்களில் 114 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தமையால் 104 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இதேநேரம் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் வீசிய ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் விளாசப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் யுவராஜ் சிங், பொல்லார்ட், திபேந்திர சிங் ஆகியோருக்கு பின் மே.தீவுகள் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.