தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 2 வருட சிறைத்தண்டனை விதித்து தலைமை நீதவான், புத்திக ஸ்ரீ ராகல உத்தரவ பிறப்பித்தார். அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராத தொகையை செலுத்தத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக ஆறு மாதகால சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவங்ச மேன்முறையீடு ஒன்றை செய்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            