யுத்தத்தின் பின்னர் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்த ஆயுதங்கள்! நாடாளுமன்றில் அம்பலமான தகவல்

நாட்டில் பாதாள உலக குழுக்களினால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் பெரும்பாலானவை யுத்தத்தின் பின்னர் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவையாகவே உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (06.06.2023) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் பொது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமானவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், நாட்டில் அதிகமான சட்டவிரோத சம்பவங்களின் போது பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளில் அதிகமானவை 30 வருட யுத்தத்திற்கு பின்னர் வடக்கிலிருந்து தெற்கு பிரதேசங்களுக்கு வந்தவையாகும்.

அத்துடன் யுத்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நவீன ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மீண்டும் பெறப்பட்டதா என்ற தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடமே இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.