40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வோம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முட்டை விலைகளை அதிகரிக்க முற்பட்டால், 40 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த 40 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் வாரத்தில் முட்டையின் விலையை 50 ரூபாவை விட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைக்காவிட்டால் அடுத்த மாதம் முட்டை கொள்வனவு மேற்கொள்ளப்படுமென்றும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. சந்தையில் தற்போது முட்டையொன்றின் விலை 60 – 65 க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முட்டை உற்பத்தியாளர்கள் தாம், நினைத்தவாறு தன்னிச்சையாக முட்டை விலைகளை அதிகரித்து வருவதால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.

ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 30 ரூபாவே செலவாகிறது. இந்நிலையில் உற்பத்தியாளர்கள் மற்றும் முட்டை மாபியாக்களால் விலைகள் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.