மாக்கந்துரே மதுஷை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கியமைக்காகவே கிளப் வசந்தவை கொலை செய்ததாக கஞ்சிபானை இம்ரான் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுஷ் தொடர்பில் விசாரணை நடத்திய கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபானை இம்ரான் கூறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில், பொலிஸ் தலைமையகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதுருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் சடலம் பொரளையில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மலர்ச்சாலையின் தொலைபேசிக்கு மிரட்டல் விடுத்து அழைப்பு வந்ததாகவும் கிளப் வசந்தவின் பிரேதத்தை அங்கு வைக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவித்தது குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதா என கேட்கப்பட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி மலர்ச்சாலைக்கு வந்த முதலாவது மிரட்டல் அழைப்பு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் பொரளை பொரளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த அழைப்பு வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த (08) ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.