காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தமது உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            