இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்களால் பாதிப்பு என எச்சரிக்கை


நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என  இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்
 
 தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, உணவு ஒவ்வாமை, சுவாச நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர்.

எனவே சந்தைக்குக் கொண்டு வரப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

இல்லையெனில் அவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்