இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாகக் கூறி மோசடியான வேலை விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தளங்களில் பெரும்பாலும் பகிரப்படும் இந்த ஏமாற்றும் விளம்பரங்கள், வேலை தேடுபவர்களை தவறாக வழிநடத்த மத்திய வங்கியின் அதிகார பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் தொடர்பு எண்கள்
மேலும், மூன்றாம் தரப்பு சமூக ஊடகப் பக்கங்களில் வேலை வாய்ப்பு தொடர்பான பதிவுகளை வெளியிடுவதில்லை என்று மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்து அதிகார பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்புகளும் மத்திய வங்கிaின் வலைத்தளத்தில் தொழில் பிரிவின் கீழ் மற்றும் அதன் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக சேனல்கள் மூலம் பிரத்தியேகமாகக் கிடைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவும், வேலை தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகார பூர்வ இலங்கை மத்திய வங்கியின் தளங்கள் மூலம் நேரடியாகச் சரிபார்க்கவும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு, பொதுமக்கள் மத்திய வங்கியின் 0112477669 அல்லது 0112477965 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            