வாக்குப் பதிவு நிறைவு : மன்னாரில் 70 சதவீதமும் கண்டியில் 21 வீதமும் பதிவு

 
 


நாடாளவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.

நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் அடங்கலாக 339 உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது

 கல்முனை மாநகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த மற்றைய அனைத்து சபைகளுக்குமான தேர்தல் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்படி, 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மொத்தமாக 8278 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 25 மாவட்டங்களிலும் 4879 வட்டாரங்களில் 13,759 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிக்கும் நடவடிக்கைள் இன்று பிற்பகல் 4 மணிக்கு முடிவடைந்தன.
 
வாக்களிப்பு நிறைவடைந்தவுடன், அந்ததந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 

அதற்கமைய மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் வீதங்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில்
திஹாமடுல்ல 63%

யாழ்ப்பாணம் 44.03%

வவுனியா 60%

மன்னார் 70%

மொனராகலை 61%

நுவரெலியா 60%

கேகாலை 58%

அனுராதபுரம் 60%

களுத்துறை 61%

கம்பஹா 36%

பதுளை 60%

இரத்தினபுரி 50%

காலி 63%

மாத்தறை 45%

கிளிநொச்சி 39.8%

புத்தளம் 40%

மாத்தளை 25%

கண்டி 21%

ஹம்பாந்தோட்டை 20%

கொழும்பு 50%

பொலநறுவை 64%

குருணாகல் 20%

திருகோணமலை 67%,

மட்டக்களப்பு 38%,

முல்லைத்தீவு 60%

முல்லைத்தீவில் 25வீதமும் பதிவாகியிருந்தனர்.

இதேவேளை   உள்ளாட்சித் தேர்தலின் முதல் அதிகாரபூர்வ முடிவுகள் இரவு 11:00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்றும் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளின் முடிவுகள் முதலில் வெளியிடப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் முன்னைய தேர்தல்கள் போன்று இன்றைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக வாக்குப் பெட்டிகளுடன் சேர்த்து அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கான தபால் வாக்குகளும் வாக்குச் சாவடி பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்துக்குமான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையே இம்முறை அறிவிக்கப்படவுள்ளது.