உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர விளாடிமீர் புடின் தீர்மானம்!

உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.விளாடிமிர் புட்டினுடனான சமீபத்திய பேச்சுக்களில் இருந்து அவர் இதை விரைவில் முடிக்க விரும்புவதாக தாம் நம்புவதாக எர்டோகன் கூறினார்.

கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டில் புடினை சந்தித்து கலந்துரையாடிதற்கு பிறகு எர்டோகன் இந்த கருத்தை வெளியிட்டார்.அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியில், ‘போரை விரைவில் முடிக்க அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர் உண்மையில் எனக்குக் காட்டுகிறார். இது என் எண்ணம், ஏனென்றால் இப்போது விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் விதம் மிகவும் சிக்கலானது.

இருதரப்புக்கும் இடையே விரைவில் 200 பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படும். அத்தகைய கைதிகள் இடமாற்றத்தில் யார் சேர்க்கப்படுவார்கள் என்பது பற்றிய கூடுதல் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை’ என கூறினார்.