சீன கப்பலின் வருகை இந்தியாவை உளவு பார்க்கவே - அடித்து கூறுகிறார் இந்திய ஊடகவியலாளர்

இலங்கை ஹம்பாந்தோட்டையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஆராய்ச்சி கப்பல் என கூறப்படும் யுவான் வாங் 5 என்ற கப்பல் இந்தியாவை உளவு பார்க்கவே கொண்டு வரப்பட்டது என்பதை அடித்துக் கூற முடியுமென தெரிவித்துள்ளார் தமிழக ஊடகவியலாளர் கே. இராதாகிருஷ்ணன்.

இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் தெரிவித்த முக்கிய விடயம் வருமாறு,

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலேயே “ஐ .என்.எஸ் கட்டபொம்மன்” என்ற துணை தொலைத்தொடர்பு நிலையம் அமைந்துள்ளது.அங்கிருந்து வங்காள மற்றும் அராபிய கடல் பகுதிகளில் தொடர்பு வைக்கும் நிலையமாக அது அமைந்துள்ளது.

அதேபோன்று இந்திய கடற்படையின் பிரதான பயிற்சி மையம் கொச்சியில் அமைந்துள்ளது.கார்வாலில் கடற்படை தளம் உள்ளது.கல்பாக்கத்திலும் ஒரு முகாம் உள்ளது.கூடங்குளத்தில் அனல் மின் நிலையம் உள்ளது.

எனவே இவ்வாறான பல விடயங்கள் உள்ள இடத்திற்கு அருகில் நிற்கும் சீன கப்பலுக்கு அங்கே என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளது.இதனாலேயே இந்தியாவை உளவு பார்க்கவே இந்த கப்பல் வந்ததாக ஐயம் எழுவதாக அவர் தெரிவித்தார்.