இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விராட் கோலி - ஒரு பதிவுக்கு எத்தனை கோடி பெறுகிறார் தெரியுமா..!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்த்தில் உள்ள பிரபலங்கள் தமது கணக்குகளில் விளம்பர பதிவை வெளியிட்டு கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பர பதிவுகள் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் பட்டியலை இங்கிலாந்தின் ஹாப்பர் எச்.கியூ. நிறுவனம் வெளியிட்டது.

முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ. 26.78 கோடி (இந்திய மதிப்பின் படி) பெறுகிறார். அவரை 60 கோடி பயனர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

2-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி (ரூ.21.15 கோடி) உள்ளார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார். அவர் மொத்த பட்டியலில் விராட் கோலி 14-வது இடத்தில் உள்ளார்.

விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலியை 25.60 கோடி பேர் பின் தொடருகிறார்கள்.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் (ரூ.9.45 கோடி) ஒட்டுமொத்த பட்டியலில் 19-வது இடத்திலும், விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளார்.

மேலும், முதல் 100 பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி, நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராம் பிரபலம் ரியாஸ் அலி ஆகிய மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.