4 ஆவது முறையாக ஐசிசி சிறந்த வீரருக்கான விருது வென்ற விராட் கோலி


ஐசிசி சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council)  வழங்கும் வருடாந்த விருது வழங்கள் விழாவில் விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற ஐசிசி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 8 அரை சதங்கள் அடங்கலாக 1,377 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ஓட்டங்களை பெற்று தொடரின் சிறந்த ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார். 

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்ட நிலையில் விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவருக்கு வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது.

மேலும், விராட் கோலி 4ஆவது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.