விஜய் அரசியலுக்கு வருவாரா...! சர்ச்சையை கிளப்பிய சீமானின் பதில்

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிமைப்பாளர் சீமான் சர்ச்சையாக பதிலொன்றை வழங்கியுள்ளார்.

ஊடகவியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு விடயங்கள் குறித்து பேசினார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் பற்றி பேசப்பட்ட போது மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியதை சீமான் பாராட்டினார்.

நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து பேசியதாவது, 'நடிகர் விஜய் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார். அவர் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

அதிகளவு ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். அவரது உதவி எனக்கு தேவையில்லை. நன்மை செய்யும் நோக்கில் அவர் அரசியலுக்கு வந்தால் தவறில்லை' என தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் அரசிலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, நான் ஏன் அவருடன் கூட்டணி அமைக்க வேண்டும்? எங்கள் கொள்கை, கோட்பாடு வேறு என சீமான் தெரிவித்தார்.