நடு வீதியில் தொடருந்தை நிறுத்தி உணவு வாங்கிய சாரதி: பேசுபொருளாக மாறிய காணொளி

புத்தளம் - கொழும்பு  பிரதான வீதியின் நடுவில் தொடருந்தை நிறுத்தி அருகாமையில் உள்ள கடையொன்றில் இருந்து உணவு பெற்றுக்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த காணொளி மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பியுள்ள போதிலும், குறித்த புகையிரதம் வாய்க்கால் தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாய்க்கால் தொடருந்து நிலையம் சிறியதாக இருப்பதாலும், பயணிகள் தொடருந்து நீளம் நீண்டதாலும், அதன் இயந்திரப் பகுதி புத்தளம்-கொழும்பு பிரதான வீதயின் நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது, ​​தொடருந்தில் இருந்து இறங்கிய சாரதி, அருகில் உள்ள கடையில் உணவுப் பொதியை வாங்கி, தொடருந்து இயந்திர பகுதிக்குள் மீண்டும் நுழைய, தொடருந்த மீண்டும் பயணிக்க தொடங்கியது.

எனினும், குறித்த சாரதி செய்த இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக தற்போது மாறியுள்ளது.