அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகை பரிசோதனை சான்றிதழைப் பலர் பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் வீதியில் வாகனங்கள் செலுத்தும் போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேநேரம் சுற்றுலாத்துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஆனால் இதுவரை அவை இறக்குமதி செய்யப்படவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் (கiயெnஉந அinளைவநச) ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இவற்றில் 250 பஸ்கள் மற்றும் 750 வேன்கள் உள்ளடங்கும் என்றும் இதற்கு சுற்றுலா அமைச்சகத்தின் அனுமதி தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வாகன இறக்குமதி குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு ஜூலை 4ஆம் திகதி கூடி அதன் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.