வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க(Priyanda Thunusinghe) தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தினால் நாட்டின் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தான் இருப்பதாகவும்  பேராசிரியர் பிரியந்த துனுசிங்க சுட்டக்காட்டியுள்ளார்

இதேவேளை, எதிர்காலத்தில் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) நேற்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஏற்கனவே விசேட குழுவொன்று தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.