வாகன இறக்குமதி : மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு


வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
அத்துடன் நிதியமைச்சின் சில அதிகாரிகள் உள்நாட்டு கைத்தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் சமிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
 
மோட்டார் சைக்கிள்களுக்கு தேவைப்படும் இயந்திரம், மின்குமிழ்கள், மீட்டர்மானி உள்ளிட்ட ஏனைய உதிரிபாகங்கள் அனைத்தும் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
 
இந்தநிலையில், தங்களது உற்பத்திகளுக்கு சிறந்த கேள்வி நிலவுகிறது.
 
அதேநேரம் தற்போது உதிரிபாகங்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
 
இவ்வாறான தருணத்தில் வாகன இறக்குமதி கட்டுபாட்டை தளர்த்தியமை மற்றும் வரியை அதிகரித்தமை காரணமாக தமது தொழிற்துறைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சமிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.