எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
குறித்த தகவலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.   
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            