உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பெப்ரவரி 14ஆம் திததியை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
மற்றவர்கள் தங்கள் படைப்பாற்றலால் புதிய வழிகளில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில் மாட்டின் முன் கால்களில் பெண் போலவும், பின் கால்கள் ஆண் போலவும் இருக்கும்படி அந்த நபர் படம் வரைந்துள்ளார்.
மாடு நடந்து கொண்டிருக்கும் போது, அந்த ஆண் பூக்களுடன் பெண்ணின் பின்னால் செல்வது போல உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
