பதவி விலகிய ஊவா மாகாண ஆளுநர்...சஜித்துடன் இணைந்தார் |

ஊவா மாகாண (Uva Province) ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (A. J. M. Muzammil) தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்கும் நோக்கில் ஊவா மாகாண ஆளுநர் பதவி விலகியதாக  தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல ஆளுநர்கள் பதவியில் இருக்கும் போதே, வெவ்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்து வருகின்றமை தொடர்பாகத் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.