இலங்கையில் (Srilanka) உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூவரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (24.10.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயணத் தடை விதிக்க முன்னர், அமெரிக்க தூதுவர் இது குறித்து என்னுடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானித்து அறிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள், மற்றும் வெளிநாட்டவர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகையில் எவ்வித பாதிப்பும் இல்லை. நாங்கள் ஏற்கனவே நிலைமையை சமாளித்து விட்டோம் என விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.