பூஸ்டர் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்ள வலியுறுத்தல்!

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெறவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது மிகவும் ஆபத்தான நிலை என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.எனவே, கொரோனா வைரஸிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பு தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தேவையான ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இரண்டு கொரோனா தடுப்பு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களிடத்தில் வைரஸிற்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருவதாகவும் வைத்தியர் சமித்த கினிகே குறிப்பிட்டுள்ளார்.