மாமாவை வெட்டிக் கொன்ற மருமகன்..! இலங்கையில் பயங்கரம் - நடந்தது என்ன?


மாதம்பே, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், 

சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.