மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் அரச அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் நாகரீகமற்ற வீதத்தில் நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த கேந்திர நிலையத்தின் அரச அதிகாரியான பதூர்டீன் என்பவரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
கடந்த (11.07.2023) அன்று திடீரென புளுட்டுமானோடை கண்டத்திற்கு மட்டுமே பசளை வளங்குவதாகவும் (14.07.2023) அன்றுடன் பசளை வினியோகம் நிறுத்தப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பசளை எடுக்கவந்த பெண் விவசாயிகளிடம் நாகரீகமற்ற முறையில் பேசி வெளியேற்றியுள்ளார்.
அரச அதிகாரி எனும் வகையில் அவர்கள் பொதுமக்களை ஓழுக்கத்துடன் அணுக வேண்டும். ஆனால் அதற்கு மாறாக விவசாயிகளிடம் இவ்வாறு நடந்துகொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            