நடுவர் தகுதியற்றவர் : கடுமையாக விமர்ச்சித்த வனிந்து ஹசரங்க

 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நடுவர் நோபோல் வழங்க தவறியதால், போட்டியின் நடுவராக செயற்பட்ட லின்டால் ஹனிபலை இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க விமர்சித்துள்ளார்.

போட்டியில் 219 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இருந்தது.

இந்தநிலையில் களத்தில் இலங்கை அணியின் கமிந்து மென்டிஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் வஃபாடர் மொமன்ட் (றுயகயனயச ஆழஅயனெ) போட்டியின் இறுதி ஓவரை வீசினார்.

இதன்போது அவர் வீசிய பந்தை நடுவர் நோபோல் என அறிவிக்காததை அடுத்து களத்தில் துடுப்பெடுத்தாடிய கமிந்து மென்டிஸ் நோபால் என அறிவிக்குமாறு நடுவரிடம் கோரினார்.

இதனையடுத்து குறித்த பந்தை உயரத்தின் அடிப்படையில் வைத்து பார்த்தபோது அதனை நோபோல் என அறிவித்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யப்பட்டது.

இறுதியாக குறித்த போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் தோல்வியடைந்து.

இந்தநிலையில் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வனிந்து ஹசரங்க,

சர்வதேச போட்டிகளில் இது இடம்பெறமுடியாது, குறித்த பந்து இன்னும் சற்று உயரமாகயிருந்தால் துடுப்பாட்டவீரரையே காயப்படுத்தியிருக்கும் இதனை அவதானிக்க முடியாவிட்டால் நடுவர் தகுதியற்றவர் என்பதே அர்த்தம். அவர் வேறு வேலையை பார்க்கலாம் என தெரிவித்தார்.