அம்பாறையில் (Ampara) அரசாங்கத்திற்கு எதிராக இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (19) மாலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்
அரசாங்கம் மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரியை முற்றாக நீக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தில் புதிய விடுதிகளை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டம் அட்டாளைச் சேனை பகுதியிலும் நேற்று (19) தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பொது மக்களின் வாழ்க்கைச் செலவை குறைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்பாக போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கத் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டினர்.