பெக்கோ சமனின் அதி சொகுசு பேருந்துகள்! தேடிக் கைப்பற்றிய அதிகாரிகள்

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளியான பெக்கோ சமனுக்கு சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினரால் சம்பந்தப்பட்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளில் ஒன்று, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்கவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த போது காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மொனராகலை-கொழும்பு பேருந்து 

மற்றைய சொகுசு பேருந்து, மொனராகலை-கொழும்பு வழித்தடத்திற்கு பயன்படுத்தப்படும் பயணிகள் பேருந்து ஆகும், அது புறக்கோட்டை தனியார் பேருந்து முனையத்தில் அதன் பயணத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பேருந்துகளும் பெக்கோ சமனால் வேறு நபர்களின் பெயரில் வாங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.