நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டு!

நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.இதற்கமைய நாளை (புதன்கிழமை) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டடு அமுல்படுத்தப்படும்.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.