இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துநீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் இரண்டும் மாவனெல்ல கனேகொட பகுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு குறித்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்