தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்-இருவர் கைது!

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று மாலை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து சிவில் உடையில் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற கலவரத்தின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.அத்தோடு, தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.