TVS நிறுவனம் அதன் Apache RTR RP சீரிஸின் முதல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

ஓசூரை தளமாகக் கொண்ட மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான TVS, இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட TVS Apache 165 RTR ரேஸ் பெர்ஃபாமென்ஸ் (Race Performance) எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.ரூ.1.45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த புதிய எடிஷன் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.TVS Apache சீரிஸ் மோட்டார் சைக்கிள்களில் Race Performance சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த இந்நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த Apache 165 RTR RP பைக் எடிஷன் இந்தியாவில் நிறுவனத்தின் ரேஸ் பெர்ஃபாமென்ஸ் சீரிஸின் வெளிவந்துள்ள கீழ் முதல் மோட்டார் சைக்கிள் ஆகும்.இந்த புதிய TVS பைக் எடிஷன் Bajaj Pulsar 150, Yamaha FZ16 மற்றும் 150-160cc பிரிவில் உள்ள மற்ற மோட்டார் சைக்கிள்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.RTR 165 RP பைக்கானது Apache RTR 160 4V அடிப்படையிலானது ஆனால் அதை விட அதிக விலை கொண்டது. Apache 165 RP பைக்கை இந்த பிரிவில் மிகவும் சக்தி வாய்ந்த பைக்காக மாற்றும் புதிய எஞ்சின் இடம் பெற்றுள்ளதே இந்த அதிக விலைக்கு காரணம். அப்பாச்சி RTR வரிசையை பொறுத்தவரை, Apache 165 RTR RP ஆனது அப்பாச்சி RTR 160 4Vக்கு மேலேயும் அப்பாச்சி RTR 200 4Vக்குக் கீழேயும் உள்ளது.TVS Motors நிறுவனம், இந்த புத்தம் புதிய எடிஷன் 200 யூனிட்ககளை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. மேலும் இந்த பைக்கை வாடிக்கையாளர்கள் இப்போது புக்கிங் செய்ய கிடைக்கிறது என்றும் TVS குறிப்பிட்டுள்ளது.இந்த புதிய TVS Apache RTR 165 RP பைக் 164.9 cc சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 10,000 rpm-ல் 19 bhp பவரையும் மற்றும் 8,750 rpm-ல் 14 Nm டார்க்கை வெளிப்படுத்தும்.இந்த பைக்கின் எஞ்சின் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெட் அலாய் வீல்கள் மற்றும் புதிய சீட் பேட்டர்ன் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.இதில் 2 லோ பீம், 3 ஹை பீம் ஆகும். இந்த பைக்கில் 240 மிமீ ரியர் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அட்ஜஸ்டபுள் கிளட்ச், பிரேக் லிவர்கள் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றை கொண்டுள்ளது. கூடுதலாக பைக்கில் பிராஸ் கோட்டட் செயின் (brass coated chain) உள்ளது. இது கூடுதல் நீடித்த தன்மையை வழங்கும்இந்த பைக்கில் சிக்னேச்சர் ஃப்ரன்ட் பொஷிஷன் லேம்ப்புடன் (front position lamp) அக்ரஸிவ்வான ஹெட்லேம்ப் உள்ளது. அனைத்து LED கிளாஸ் B ஹெட்லேம்ப்களும் 5 LED-க்களை கொண்டுள்ளது