வெள்ளி வென்ற துருக்கி வீரர் : இணையத்தில் வைரல்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும், சுவாரஸ்யங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

 அந்த வகையில் நேற்று முன்தினம்  துருக்கியைச் சேர்ந்த யூசஃப் டிகெக் (Yusuf Dikec) என்பவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் எந்தவொரு பிரத்தியே உபகரணங்களும் இல்லாமல், சாதாரணமான கண் கண்ணாடியை மட்டும் அணிந்தபடி இயல்பாக காற்சட்டை பையினுள் கைவிட்டபடி துப்பாக்கி சுடுதல் நடத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.


பொதுவாக இதுபோன்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் சத்தம் கேட்காமல் இருக்க நொய்ஸ் கேன்சலர் ஹெட்செட், தெளிவான பார்வைக்கு லென்ஸ் மற்றும் சரியாகக் குறி வைக்கத் தனியே ஒரு லென்ஸ் என பிரத்தியேக உபகரணங்களுடன் களத்தில் வந்து நின்று சுடுவார்கள்.

ஆனால் யூசஃப் டிகெக், இவை ஏதுமின்றி சாதாரணமாக வந்து நின்று குறி வைத்துச் சுட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யூசஃப் டிகெக்கின் இந்த செயலரை பலரும் பாராட்டி வருவதோடு இணையத்திலும் வைரலாகியுள்ளார்.