அனுமதியின்றி சவுதி அரேபிய பயணம் - மெஸ்ஸி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!


ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி தமது Paris Saint-Germain (PSG) அணியின் அனுமதியின்றி சவுதி அரேபியா சென்றுள்ளார்.

இதற்காக அணி நிர்வாகம் மெஸ்ஸி மீது நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

அவருக்கு இரண்டு வாரம் தடை விதிக்கப்படலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தடைக்காலப்பகுதியில் பயிற்சில் ஈடுபட முடியாது எனவும், அக் காலப்பகுதியில் ஊதியங்கள் எதுவும் வழங்கப்படாது எனவும் கூறப்படுகின்றது.

லயனல் மெஸ்ஸி கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) PSG அணியும், Lorient அணியும் மோதிய ஆட்டத்தில் விளையாடியிருந்தார்.

பின்னர், மெஸ்ஸி சவுதி அரேபியாவின் சுற்றுலா துறையுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் அந்நாட்டிற்குச் சென்றிருந்தார்.

இதன்காரணமாக, திங்கட்கிழமை (1 மே) நடைபெற்ற பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்தநிலையிலே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.