மோட்டார் துறையில் புதிய புரட்சி - ரோபோவாக மாறும் கார்!


துருக்கியின் லேட்ரோன்ஸ் நிறுவனத்தினால் ரோபோவாக மாறக்கூடிய உலகின் முதலாவது கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஆன்டிமோன்" என்று  பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு BMW காரானது சக்திவாய்ந்த கை அசைவுகள் மற்றும் முகமும் உடைய ஒரு பெரிய ரோபோவாக மாறுவதனையும் பேசுவதனையும் நிறுவனத்தினர் ஒரு காணொளியாக வெளியிட்டுள்ளனர்.

அது தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

லெட்ரான்ஸின் முதலாவது படைப்பான "ஆன்டிமான்" இனை உருவாக்க எட்டு மாதங்கள் எடுத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது மோட்டார் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம். இது ஒரு தனித்துவமான திட்டம் மாத்திரமின்றி எதிர்காலத்தை நிகழ்காலத்தின் கண்முன் தோற்றுவிப்பதாகவும் உள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிறுவனம் போதுமான நிதியுதவியைப் பெற்றால், பிஸ்மட், ஆர்கான், வோல்ஃப்ராம் மற்றும் டான்டல் எனப்படும் லெட்ரான் தொடரில் நான்கு வகைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும்  தகவல் வெளியிட்டுள்ளது.