45 நிமிடங்களாக நடு வீதியை மறித்து நின்ற தொடருந்து - அசௌகரியத்தில் மக்கள்



மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் தொடருந்து நின்றுள்ளது.

இதன் காரணமாக தொடருந்து கடவை ஊடாக பயணிக்கும் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10 மணி முதல் 10 45 மணி வரை தொடருந்து வீதியை மறித்து நின்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மட்டக்களப்பு தொடருந்து பொறுப்பதிகாரியை வினாவ முற்பட்டபோது பயனளிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.