மன்னாரில் பேரதிர்ச்சி : 10 வயது சிறுமி பாலியல் துஷ்pரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை...!

10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15.02.24) இரவு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மன்னார், தலைமன்னார் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் தனது மனைவியுடன் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார் .

அதனால் குறித்த பிரதேசத்தில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் நேற்று மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அருகில் இருந்த சிசிடிவி கெமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் வெள்ளிக்கிழமை (16.02.24) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.