5300 கோடி ரூபாவை ஏமாற்றிய வர்த்தகர்கள் - சிறிலங்காவுக்கு விழுந்த பேரடி

நாட்டின் மொத்த கடனையும் அடைக்கக்கூடிய அளவிலான 53 பில்லியன் (5300 கோடி) டொலர்களை, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய வர்த்தகர்கள் நாட்டிற்கு செலுத்தாது ஏமாற்றியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்கள் கடந்த 12 வருடங்களாக நாட்டிற்கு வழங்க வேண்டிய 53 பில்லியன் டொலர்களை செலுத்தாது ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்தளவு நிதி முறையாக நாட்டிற்கு கிடைக்கப் பெற்றிருந்தால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.