உயிர் பயத்தில் ஒளிந்துகொண்ட சுற்றுலாப் பயணிகள்., சஃபாரி வாகனத்தை தாக்கிய யானை

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தை யானை பலமுறை தூக்கி வீசிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனால் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து ஒளிந்துகொண்டனர். ஆனால் யானை ஒதுங்கியதால் அவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.

Video links

https://twitter.com/i/status/1770059486369079560

https://twitter.com/i/status/1769975530479092194

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.

சில சுற்றுலாப் பயணிகள் திங்களன்று பிலானெஸ்பெர்க் தேசிய பூங்காவிற்குச் சென்றனர். சுமார் 22 பேர் சஃபாரி வாகனத்தில் ஏறி பூங்காவை சுற்றிப்பார்த்துள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக சஃபாரி வாகனத்தை ஒரு பாரிய யானை தடுத்து நிறுத்தியுள்ளது. தனது தந்தங்களால் வாகனத்தை காற்றில் பலமுறை தூக்கி போட்டது.

இதனால் சஃபாரி வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். நடுங்கிப்போன அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒளிந்துகொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வாகனம் கவிழவில்லை.

மறுபுறம், சஃபாரி வாகனத்தின் ஓட்டுநர் கதவில் கையைத் தட்டி சத்தம் போட்டார். இதனால் யானை சற்று நேரம் கழித்து பக்கம் சென்றது.

அப்போது பூங்காவில் இருந்த ஒருவர் இதை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளியுடன், வாகனத்தை யானை தாக்கும் மற்றொரு காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.