சாதாரண தர பரீட்சையில் 09 ஏ சித்திகளை பெற்ற மொத்த மாணவர்கள்: வெளியானது விவரம்

2023 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி 13,309 மாணவர்கள் 09 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றையதினம் (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் முதல் பத்து இடங்களுக்குள் 09 மாணவிகளும் ஒரு மாணவர் ஒருவரும் உள்ளதாகவும், பெறுபேறுகளின்படி ஒருவர் முதலாம் இடத்தையும் இருவர் இரண்டாம் இடங்களையும் நால்வர் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கு 3,527 பரீட்சை நிலையங்களில் 3,87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும், 452,979 மாணவர்களும் தோற்றியிருந்தனர்.

அதன் படி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 2,44,228 மாணவர்கள் அதாவது 75.72 வீதமான (75.72%) மாணவர்கள் உயர்தரம் படிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், 8,217 மாணவர்கள் அதாவது 2.12 வீதமான (2.12%) மாணவர்கள் உயர்தரம் படிக்கத் தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.