இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் நிறுத்தம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் 3ஆவது போட்டியில் இன்று(10) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் இந்தி அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷப்மன் கில் ஆகியோர் களமிறங்கி இருவரும் அரைச் சதம் விளாசியுள்ளனர்.

இந்நிலையில்,  இந்திய அணி 24.1 பந்துப்பரிமாற்றத்தில் 2 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்றுத் தினமான (ரிசர்வ் டே) நாளைய நாளில் இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து போட்டி  தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது